Tuesday, October 26, 2010

தோனியானேன்...

தோனியானேன்
அவள் கரையேற - கரையேறியும்
விட்டால் நிம்மதியாக
ஆனால்,
கரையேற்றிய தோனி
இன்னும் தத்தளிக்கிறது நடுக்கடலில்
அனாதையாக....

Monday, July 19, 2010

நிதர்சனம்...

நான்,
என்ன தான் என் தாயை - தெய்வமாக வணங்கினாலும்
மற்ற பெண்களும் என் தாயை போல ஒரு தாய் தான்
அல்லது
தாயாக போகிறவள் தான் என்பதை - சில இல்ல பல சமயங்களில்
மறந்து தான் போகிறேன்.....

Friday, April 9, 2010

அழகு..

"புறத்தைச் சார்ந்ததில்ல - அகத்தைச் சார்ந்தது" - என்பது
நமக்கு புறம் சரியில்லாத போது தான் புரிகிறது ..........

அம்மா..

மூன்றே
எழுத்தில் - ஒரு
முழு கடவுள் ......

எப்பொழுதும்
என்றென்றும் தெளிவாக உள்ள - ஒரு
நீரோடை....

எதையும்
எவரிடத்தும் எதிர்பார்க்காத - ஒரு
யதார்த்தம்...

உனக்காகவும்
எனக்காகவும் தன்னையே
தானம் செய்யும் - ஒரு
தியாகம்...